தொடர்புத்தொழுகைகள் (ஸலாத்)

ஐந்து வேளை தொடர்புத்தொழுகைகளின் அனைத்து நிலைகளுக்குமான விளக்கம். என்ன செய்ய வேண்டும். என்ன கூற வேண்டும்.

தொடர்புத்தொழுகையானது (ஸலாத்) இப்ராஹிம் நபி (ஆப்ரஹாம்) காலம் முதல் தலைமுறை தலைமுறையாக மனிதர்களால் பின்பற்றபட்டு வருகின்ற ஒரு மார்க்க வழிபாட்டு முறையாகும். இப்ராஹிம் நபியில் தொடங்கி முஹம்மது நபி வரையில் வாழ்ந்த அனைத்து நபிமார்களும், தூதர்களும் தொடர்புத்தொழுகையை மிகச்சரியாக கடைப்பிடித்தார்கள் என்று அல்லாஹ் (கடவுள்) குர்ஆனின் மூலமாக நமக்கு கற்பிக்கின்றார். அதிலும் குறிப்பாக நம்முடைய மார்க்கமாகிய இஸ்லாத்தை (அடிபணிதல்) இப்ராஹிமுடைய மார்க்கம் என்றும்,

...உங்கள் தந்தை ஆப்ரஹாமின் மார்க்கமாகிய - உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர்தான் துவக்கத்தில் உங்களுக்கு “அடிபணிந்தோர்” எனப் பெயரிட்டார்... (22:78).

மேலும் முஹம்மது நபியை இப்ராஹிமுடைய மார்க்கத்தை பின்பற்றும்படி தான் கட்டளையிட்டதாகவும்,

பின்னர் நாம் (முஹம்மதே) உமக்கு ஏகத்துவ வாதியான, ஆப்ரஹாமின் மார்க்கத்தைப் பின்பற்றும்படி உள்ளுணர்வூட்டினோம்; அவர் ஒரு போதும் இணைத்தெய்வங்களை வழி பட்டவராக இருந்ததில்லை (16:123). இன்னும் முஹம்மது நபி இப்ராஹிமுடைய மார்க்கத்தை பின்பற்றுவராக இருந்தார்,

“என்னுடைய இரட்சகர் என்னை நேரான பாதையில் வழி நடத்தியிருக்கின்றார். ஆப்ரஹாமுடைய சரியான மார்க்கம், ஏகத்துவம். அவர் ஒரு போதும் இணைத் தெய்வங்களை வழிபடுபவராக இருந்த தில்லை” என்று கூறுவீராக (6:161).

என்றும் அல்லாஹ் கூறுகின்றார். கூடுதலாக இப்ராஹிமுடைய மார்க்கத்தை கைவிடுபவர்கள் தங்களுடைய சொந்த ஆன்மாக்களையே ஏமாற்றிகொள்பவர்கள் என்றும் குர்ஆன் கூறுகின்றது. தன்னுடைய சொந்த ஆன்மாவையே ஏமாற்று பவனைத்தவிர, ஆப்ரஹாமின் மார்க்கத்தை யார் கைவிடக் கூடும்?... (2:130)

ஆகையால், இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகளை மனித இனத்திற்கு அறிமுகப்படுத்தியது முஹம்மது நபி அல்ல, இவை அனைத்தும் முஹம்மது நபி காலத்திற்கு முன்னரே நடைமுறையில் மனிதர்களால் பின்பற்றுபட்டுவந்த வழிபாட்டு முறைகள் என்கின்ற உண்மையை குர்ஆனில் இருந்து தெளிவாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

அவ்வாறு, அல்லாஹ்வுடைய நாட்டப்படி குர்ஆனிலிருந்து தொடர்புத்தொழுகைகள் குறித்து நாங்கள் பெற்ற செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் மேலும் இதுநாள் வரையில் தொடர்புத்தொழுகைகள் குறித்து முஸ்லிம்கள் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கைகளை போக்கவேண்டும் என்பதுமே இந்த புத்தகத்தை வெளியிடு வதற்கான நோக்கமாகும்.

பொதுவாக மனிதர்களால், குறிப்பாக முஸ்லிம்களால் “தொழுகை” என்று அழைக்கப்டுகின்ற அந்த வார்த்தையானது அரபி மொழியில் “ஸலாத்” என்பதாகும். ஸலாத் என்பது “ஸிலட்” என்ற மூலவார்த்தையில் இருந்து பெறப்பட்ட வார்த்தையாகும். “ஸிலட்” என்றால் தொடர்பு என்று பொருள். ஆகையால் ஸலாத் என்கிற வார்த்தைக்கு தொழுகை என்று பொருள் தந்தால் அது தவறாகும், அதன் உண்மையான பொருள் “தொடர்புத்தொழுகை” என்பதேயாகும். நாம் இதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

எனெனில், நாம் ஸலாத்தை கடைப்பிடிக்கும் பொழுது நம்மை படைத்த நம்முடைய இரட்சகருடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றோம். அச்சமயம் நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையோ அல்லது தடையோ இருப்பதில்லை. நாம் நம் இரட்சகருடன் உரையாடுகின்றோம், அவரைத் துதிக்கின்றோம், மேலும் அவரிடம் உதவி கேட்கின்றோம்.

தொடர்புத்தொழுகைகள் (ஸலாத்) குறித்து கடவுள் குர்ஆனில் :
என்னை நினைவுகூர்வதற்காகவே தொடர்புத் தொழுகைகளை கடைபிடிக்கப்பட வேண்டும் (20:14).
தொடர்புத் தொழுகைகளைக் கொண்டு என்னிடம் உதவி தேடவேண்டும் (2:45,153).
தொடர்புத்தொழுகைகள் பாவகரமான செயல்கள் மற்றும் மானக்கேடான காரியங்களை விட்டு தடுக்கும் (29:45).
தொடர்புத்தொழுகைகளை கடைப்பிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் (74:42,43).
தொடர்புத்தொழுகைகளை கடைப்பிடிப்பது நேரம் குறித்த கடமையாகும் (4:103).

இன்னும் அனேக வசனங்களில் தொடர்புத்தொழுகைகள் குறித்து கடவுள் நமக்கு விவரிக்கின்றார். இத்தனை சிறப்புமிக்க தொடர்புத்தொழுகைகளை, குர்ஆனின் வழிகாட்டலுக்கு ஏற்ப மனிதர்களை கடைப்பிடிக்கச் செய்வதற்கான முயற்சியே, இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கான நோக்கம் ஆகும்.

கடவுள் நாடினால் இந்த நோக்கம் நிறைவேறும். “எங்கள் இரட்சகரே, எங்களிடமிருந்து இதனை ஏற்றுக் கொள்வீராக நீர் செவியேற்பவராகவும், எல்லாம் அறிந்தவராகவும் இருக்கின்றீர்.”

தொடர்புத்தொழுகைகள் குறித்த குர்ஆன் வசனங்கள் இப்புத்தகத்தில் பக்கம் 12லிருந்து 33வரை தரப்பட்டுள்ளது. தயவு செய்து அவற்றைப் பார்க்கவும்.

“புகழ் அனைத்தும் கடவுள் ஒருவருக்கு மட்டுமே”

ஆப்ரஹாம் ( இப்ராஹிம் ): தொடர்புத்தொழுகைகளின் ஆரம்பகர்த்தா

அரபி மொழியில் “இஸ்லாம்“ எனப்படும் “அடிபணிதல்” ஆப்ரஹாமின் (இப்ராஹிம்) மார்க்கமாக இருக்கின்றது என்று குர்ஆன் அநேக சூராக்களில் நமக்கு போதிக்கின்றது. (தயவு செய்து 2:135, 3:95, 4:125, 6:161 மற்றும் 22:78 ஆகிய வசனங்களை கவனத்துடன் பார்க்கவும்). முஹம்மது, ஆப்ரஹாமை பின்பபற்றுகின்ற ஒருவராக இருந்தார் என்பதை 16:123 வசனத்தில் இருந்து நாம் அறிகின்றோம். அடிபணிதலின் (இஸ்லாம்) மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் ஆப்ரஹாமின் மூலமாகவே நமக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில்:

 

1. தினசரி ஐந்து வேளை தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பது,
2. கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுப்பது,
3. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, மற்றும்
4. மக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகியவைகளும் அடங்கும்.
குறிப்பாக, தொடர்புத்தொழுகைகள் (ஸலாத்) மற்றும் கடமையான தர்மம் (ஜகாத்) ஆகியவை ஆப்ரஹாமிற்கு கொடுக்கப்பட்டிருந்தன என்பதை குர்ஆன் வசனம் 21:73ல் இருந்து நாம் அறிகின்றோம். முஹம்மதுடைய வருகைக்கு முன்னதாகவே தொடர்புத் தொழுகைகள் முழுமையாக வழக்கத்தில் இருந்தன, மேலும் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டும் வந்தன என்று குர்ஆன் முழுவதும் ஏராளமான வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன (உதாரணத்திற்கு 8:35, 9:54 ஐப் பார்க்கவும்). நிற்கும் நிலை மற்றும் சிரம்பணிந்த நிலை (ருகூ மற்றும் சுஜுத்) (2:43, 3:43, 9:112, 22:26,77) உள்ளிட்ட தொடர்புத் தொழுகைகளின் அனைத்து நிலைகளும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.

ஐந்து வேளைகளும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது

1. விடியற்காலை தொழுகையானது 24:58ல் பெயர் குறிப்பிட்டு சொல்லப் பட்டிருக்கின்றது.

2. நடுப்பகல் தொழுகையானது சூரியன் அதன் உச்சியில் இருந்து சாயும் பொழுது கடைபிடிக்கப்பட வேண்டும் என்று 17:78ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றது,

3. பிற்பகல் தொழுகையானது நடுப்பகல் மற்றும் சூரியஅஸ்தமனம் இவ்விரண்டிற்கும் நடுவில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று 2:238ல் கூறப்பட்டிருக்கின்றது.

4. சூரிய அஸ்தமனத் தொழுகையானது சூரியன் அஸ்தமனம் ஆனவுடன் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று 11:114 ல் கூறப்பட்டிருக்கின்றது.

5. இரவுத் தொழுகையானது 11:114 மற்றும் 24:58ல் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்டிருக்கின்றது.

தொடர்புத்தொழுகைக்கான அழைப்பு ( அனுதான் )

அனுதான் தொடர்புத்தொழுகைகளின் ஒரு பகுதி அல்ல, அன்றி அது அவசியமானதும் அல்ல, ஆனால் ஓர் உரத்த அறிவிப்பின் மூலமாக தொடர்புத்தொழுகைக்கு மக்களை வரவழைப்பதற்கு, முஸ்லிம் சமூகங்களில் அது ஒரு பரம்பரை வழக்கமாக ஆகிவிட்டது. அசலான அனுதான் குர்ஆனின் உபதேசங்களோடு ஒத்துப் போவதாகவே இருந்தது, ஆனால் காலப் போக்கில் அது சிதைக்கப்பட்டதாக ஆகிவிட்டது.

அசலான அழைப்பு ( அனுதான் ):

1. அல்லாஹூ அக்பர் (கடவுள் மகத்தானவர்) 4 முறை 2. லா இலாஹா இல்லல்லாஹ் (கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை) 1 முறை, என்பதாகவே இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு, அனுதானில் முஹம்மதுடைய பெயரை சிலர் சேர்த்தனர். இது 2:136, 2:285, 3:84, 4:150 மற்றும் 72:18 உள்ள கடவுளின் கட்டளைகளை மீறுகின்ற செயலாகும். இதன் பின்னர் முஸ்லிம்களின் மற்ற பிரிவினர்கள் அலி மற்றும் அவருடைய குடும்பத்தினரின் பெயர்களை இதில் சேர்த்தனர்.

இன்றைய தினம் முஸ்லிம் உலகம் முழுவதும் சொல்லப்படுகின்ற அனுதானானது கடுமையாக சிதைந்த நிலையிலும் மேலும் இணைத்தெய்வ வழிபாட்டை செயல்படுத்துவதாகவும் இருக்கின்றதே தவிர கடவுளுக்கு மட்டும் அடிபணிகின்ற செயலாக இல்லை.

சரியான அனுதான்

தொடர்புத்தொழுகைகளை நீங்கள் தனியாக கடைப்பிடிக்கும் பொழுது அனுதான் கூறவேண்டிய அவசியம் இல்லை. மனிதர்கள் ஒரு குழுவாக தொடர்புத்தொழுகையை கடைப்பிடிப்பதற்கு தயாராகும் பொழுது, வழக்கமாக அனுதானும் கடைபிடிக்கப்படுகின்றது. ஒரு மனிதர் எழுந்து நின்று பின்வரும் அனுதான் வார்த்தைகளை கூறுகின்றார் அல்லது ஓதுகின்றார். அல்லாஹூஅக்பர், அல்லாஹூஅக்பர் (கடவுள் மகத்தானவர், கடவுள் மகத்தானவர்) அல்லாஹூஅக்பர், அல்லாஹூஅக்பர், லாஇலாஹா இல்லல்லாஹ் (கடவுளைக் தவிர வேறு தெய்வம் இல்லை). இதைத் தொடர்ந்து,

தொடர்புத் தொழுகைக்காக தயார் ஆகுதல்
அங்கசுத்தி (ஒது) செய்தல்:

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கும் போது நீங்கள்:
(1) உங்கள் முகங்களை கழுவிக் கொள்ளுங்கள்,
(2) உங்கள் கைகளை முழங்கைகள் வரை கழுவிக்கொள்ளுங்கள்,
(3) உங்கள் தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள் மேலும்
(4) உங்களுடைய பாதங்களைக் கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள் (5:6).
அடிபணிதலின் மற்ற பகுதிகளைப் போலவே அங்கசுத்தியையும் அனுமதியற்ற முறைகளை சேர்த்ததன் மூலம் முஸ்லிம்கள் சிதைத்து விட்டனர். எதிர்மறையாக, இந்தப் புதுமைகளைக் குறித்து எவர் ஒருவர் கேள்வி கேட்கின்றாரோ அவரையே இந்தப் புதுமைகளுக்கான குற்றவாளியாக ஆக்குகின்ற அதிகார வர்க்கத்தினரால், இந்த புதுமைகள் அங்கீகரிக்கப்பட்டவைகளாக ஆயின. ஆகையால் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளபடி அங்கசுத்தியை கண்டிப்புடன் கடைப்பிடிப்பதன் மூலம், கடவுளின் கட்டளைகளை உறுதியாகப் பின்பற்றுவது, மிகவும் முக்கியமானது ஆகும். ஏதேனும் பாலியல் காரியத்தில் ஈடுபட்டு அதன் உச்சக்கட்டத்தை அடைகின்ற ( புணர்ச்சியின் பரவசம் / வெளியாகுதல் ) ஒருவர் கண்டிப்பாக குளிக்க வேண்டும். (4:43)

உலர் அங்கசுத்தி ( தயம்மம் )

தண்ணீர் கிடைக்காத நிலையில் ஒருவர் சுத்தமான உலர்ந்த மண்ணைத் தொட்டு பின்னர் தன்னுடைய முகம் மற்றும் கைகளில் தடவிக் கொள்ள வேண்டும் அங்கசுத்திக்கு மாற்றாக இதுவே போதுமானதாகும் (4:43, 5:6).

அங்க சுத்தியை முறிப்பவை எவை

அங்க சுத்தியை முறிப்பவை எவை ஜீரண சம்மந்தமான வாயு, மலம் அல்லது சிறுநீர் உள்ளிட்ட குடல்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் அங்கசுத்தியை முறிக்கின்றன.
நினைவை இழக்கின்ற அளவு உறங்கி விடுதலும் அங்கசுத்தியை முறிக்கின்றது. இவ்விதமாக, அங்கசுத்தியை முறிக்காத நிலையில் ஒருவர் ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புத் தொழுகைகளையும் கடைப்பிடித்து கொள்ளலாம்.

தொடர்புத் தொழுகைகளை எவ்வாறு நிறைவேற்றுவது

1. மக்காவின் ( கிப்லா ) திசையை நோக்கி திரும்புதல்:
மக்காவின் திசையை நோக்கி திரும்புதல் 2:125ல் கடவுளால் கட்டளையிடப்பட்டிருக்கின்ற ஓர் ஒழுக்க நெறியாக இருக்கின்றது. அடிபணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) தங்களுடைய தொடர்புத் தொழுகைகளை நிறைவேற்றும் பொழுது ஒரே திசையை நோக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார்.

2. நோக்கம் (நிய்யத்து):
நீங்கள் எந்த தொடர்புத்தொழுகையை கடைபிடிக்கின்றீர்களோ, அந்த தொடர்புத்தொழுகையின் உங்கள் நோக்கத்தை, அதாவது நிய்யத்தை உங்களது சொந்த மொழியிலோ அல்லது அரபி மொழியில் “நவய்த்து ஸலாத் அல்ஃபஜ்ர்” என்று “அதிகாலைத் தொழுகைக்கும்”, “நவய்த்து ஸலாத் அல்லுஹர்” என்று “நண்பகல் தொழுகைக்கும்”, “நவய்த்து ஸலாத் அல்அஸ்ர்” என்று “பிற்பகல் தொழுகைக்கும்”, “நவய்த்து ஸலாத் அல் மஹ்ரிப்” என்று “சூரிய அஸ்தமனத் தொழுகைக்கும்”, “நவய்த்து ஸலாத் அல்இஷா” என்று “இரவு தொழுகைக்கும்” இரகசியமாகவோ அல்லது சப்தமாகவோ கூற வேண்டும்.

3. உங்கள் முகத்தின் பக்கவாட்டில் உங்கள் கைகளை உயர்த்த வேண்டும்:
உங்கள் உள்ளங்கைகள் முன்புறம் நோக்கியவாறு பெருவிரல்களால் உங்கள் காதுகளை தொட்டு


4. “அல்லாஹூ அக்பர்”, என்று கூறுவீராக: உங்கள் முகத்தின் பக்கவாட்டில் உங்கள் கைகளை உயர்த்தியவாறு “அல்லாஹூ அக்பர்”, ( கடவுள் மகத்தானவர் ) என்று கூறி கைகளை சீராக பக்கவாட்டில் தொங்க விடவும். இது தொடர்புத்தொழுகையை துவக்குகின்றது. இப்போது நீங்கள் உங்களைப் படைத்தவருடன் தொடர்பில் இருக்கின்றீர்கள்.

5. நிற்கும் நிலை:
உங்களுடைய கைகள் உங்களுக்கு பக்கவாட்டில் இயல்பாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது நீங்கள் நின்று கொண்டிருக்கின்றீர்கள். சிலர் தங்களது இடது கையை வயிற்றின் மீது வைத்து அதன் மீது வலது கையை வைத்தநிலையில் நிற்பார்கள். இரண்டு நிலைகளும் சரியானதே. நின்று கொண்டிருக்கும் நிலையில் உங்கள் கைகளை உங்கள் வயிற்றின் மீதும் வைக்கவாம். அல்லது கைகளை பக்கவாட்டிலும் தொங்கவிட்டு கொள்ளலாம்.


6. “திறவு கோல்” (சூரா 1)ஐ அரபியில் ஓதுதல்:
கடவுள் நமக்கு வார்த்தைகளை தந்திருக் கின்றார், அதனைக் கொண்டு அவருடன் தொடர்பை நாம் நிலைநிறுத்தலாம் என்று 2:37ல் இருந்து நாம் அறிகின்றோம். திறவுகோல் சூராவில் கூறப்பட்டிருக்கின்ற குறிப்பிட்ட அந்த வார்த்தைகளை நாம் அரபி மொழியில் உச்சரித்தாக வேண்டும். திறவுகோல் சூராவின் மொழிபெயர்ப்பானது ஒரு மனித தயாரிப்பாகத்தான் இருக்க முடியும்.ஆனால் அரபி மொழியில் உள்ள திறவுகோல் சூராவின் சப்தங்கள் பொக்கிஷத்தை திறக்கின்றதொரு எண்ணியல் ரீதியிலான கட்டமைப்பை பிரதிபலிக்கின்றன. அதாவது, குறிப்பிட்ட எண்களை சுழற்றாமல் தொடர்பை ஏற்படுத்த இயலாத ஒரு தொலைபேசி எண்ணைப் போல. இதற்காகத்தான் உங்களுக்கு அரபிமொழி தேவையாக இருக்கின்றது. இதைத்தவிர மற்ற அனைத்தையும் உங்கள் சொந்த மொழியிலேயே கூறிக்கொள்ளலாம். திறவுகோல் சூராவை அரபிமொழியில் ஓதுவது உலகில் உள்ள முஸ்லிம்கள் (அடிபணிந்தவர்கள்) அனைவரையும் அவர்களுடைய மொழிகளைப் பொருட்படுத்தாது ஒன்று சேர்க்கின்றது.

திறவு கோல்

(1:1) பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
(கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.)


(1:2) அல்ஹம்துலில்லாஹி ரப்க்ஷபில் ஆலமீன்
(புகழ் அனைத்தும்  கடவுள்-க்குரியது, பிரபஞ்சத்தின் இரட்சகர்.)

(1:3) அர்ரஹ்மானிர் ரஹீம்
(மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.)

(1:4) மாலிக்கி யவ்மித்(னு)தீன்
(தீர்ப்பு நாளின் அதிபதி.)

(1:5) இய்யாக்க நஅ(க்ஷ)புது வ இய்யாக்க நஸ்தஈன்
(உம்மை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்; உம்மிடம் மட்டுமே நாங்கள்  உதவி கேட்கின்றோம்.)

(1:6) இஹ்னுதினஸ்ஸிராத்தல் முஸ்த்த(ணு)கீம்
(சரியான பாதையில் எங்களை வழி நடத்துவீராக;)

(1:7) ஸிராத்தல்லனுதீன அன்அம்த அலைய்ஹிம் ழுஹைரில் மஹ்னுதூபி அலைய்ஹிம் வளனுத்னுதாளீன்.
(நீர் எவர்களுக்கு அருள்புரிந்தீரோ அவர்களுடைய பாதையில்; கோபத் திற்குள்ளானோருடையதல்ல,அன்றியும் வழி தவறியவர்களுடையதுமல்ல.)
திறவுகோல் சூரா ஒரு நாளைக்கு 17 முறை ஓதப்படுவதால், சில வாரங்களிலேயே ஓதுவதற்கும், புரிந்து கொள்வதற்கும் உங்களுக்கு அது எளிதாகிவிடும். அது உங்களுடைய தாய் மொழியைப் போன்று ஆகிவிடும்.

7. குனிந்த நிலை (ருகூ):

நின்ற நிலையில் திறவுகோல் (அல் ஃபாத்திஹாஹ்) சூராவை ஓதிய பிறகு நீங்கள் ருகூ நிலைக்கு குனிய வேண்டும். வரைபடத்தில் காட்டியுள்ளபடி நீங்கள் இடுப்பை வளைத்து முழங்கால்களை நேராக வைத்து உங்கள் கைகளை முழங்கால்களின் மீது வைக்க வேண்டும் உங்கள் கண்கள் கிட்டதட்ட 2 அடிகள் முன்னோக்க வேண்டும்.

நின்ற நிலையில் இருந்து குனிந்த நிலைக்கு “அல்லாஹூ அக்பர்” (கடவுள் மகத்தானவர்) என்று கூறியவாறு செல்ல வேண்டும் குனிந்த நிலையில் “சுப்ஹான ரப்பியல் அழீம்” அல்லது “கடவுள் துதிப்பிற்குரியவர்” என்று கூற வேண்டும். எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல.

8. நிற்கும் நிலை:

குனிந்த நிலையில் இருந்து “ஸமியல்லாஹூ லிமன் ஹமிதாஹ்” அல்லது “கடவுள் தன்னைப் புகழ்வதை செவியேற்கின்றார்”, என்று கூறியவாறு மீண்டும் நிற்கும் நிலைக்கு வர வேண்டும். இந்த நிற்கும் நிலையில் ஒரு நொடி மட்டுமே நின்று “அல்லாஹூ அக்பர்” என்று கூறியவாறு சிரம்பணியும் நிலைக்கு செல்ல வேண்டும்.

9. சிரம் பணியும் நிலை (ஸூஜூனுத்):

நிற்கும் நிலையில் இருந்து முழங்காலிட்டு, பின்னர் உங்கள் முழங்கால்களுக்கு 1 அல்லது 2 அடி முன்னதாக உங்கள் நெற்றியை வைக்க வேண்டும். வரைபடம் பார்க்கவும். சிரம் பணிந்த நிலையில் நீங்கள் “சுப்ஹான ரப்பியல் ஆஃலா” அல்லது “கடவுள் துதிப்பிற்குரியவர்” என்று கூற வேண்டும்.

10. அமர்வு நிலை:

சிரம் பணிந்த நிலையில் இருந்து “அல்லாஹூ அக்பர்” என்று கூறியவாறு அமர்வு நிலைக்கு நீங்கள் செல்ல வேண்டும், அமர்வு நிலையில் ஒரு நொடி மட்டுமே தாமதித்து, பின்னர் “அல்லாஹூ அக்பர்” என்று கூறியவாறு மீண்டும் சிரம்பணியும் நிலைக்கு செல்ல வேண்டும். இரண்டாவது சிரம் பணியும் நிலையிலும் “சுப்ஹான ரப்பியல் ஆஃலா” அல்லது “கடவுள் துதிப்பிற்குரியவர்” என்று கூற வேண்டும். இரண்டாவது சிரம் பணியும் நிலையை நீங்கள் நிறைவு செய்து விட்டால் நீங்கள் ஒரு முழு ரகஅத்தை நிறைவு செய்து விட்டீர்கள்.

11. இரண்டாவது ரகஅத்திற்காக எழுந்து நிற்பது:

தொடர்ந்து “அல்லாஹூ அக்பர்” என்று கூறியவாறு இரண்டாவது ரகஅத்திற்காக எழுந்து நிற்க வேண்டும்.

அதிகாலைத் தொடர்புத்தொழுகை (குபஜ்ர்):

இந்த தொடர்புத்தொழுகை இரண்டு ரகஅத்துகளைக் கொண்டது.நீங்கள் இரண்டாவது சிரம் பணியும் நிலையில் இருந்து “அல்லாஹூ அக்பர்” என்று கூறியவாறு எழுந்து நின்று, முதல் ரகஅத்தைப் போலவே இரண்டாவது ரகஅத்தின் இரண்டாவது சிரம்பணியும் நிலையை நிறைவு செய்த பிறகு அமர்வு நிலைக்கு வந்துவிட வேண்டும். அவ்வாறு அமர்ந்த நிலையில் இஸ்லாத்தின் (அடிபணிதல்) முதல் தூணாகிய, “அஷ்ஹது அல்லா இலாஹா இல்லா அல்லாஹ் வஹ்தஹூ லா ஷரீக்கலஹ்” (கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன், அவர் தனித்தவர், அவருக்கு பங்காளி கிடையாது) என்ற ஷஹாதாவை கூற வேண்டும். பின்னர் வலது புறம் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூற வேண்டும். பின்னர் இடது புறம் பார்த்து “அஸ்ஸாமு அலைக்கும்” என்று கூற வேண்டும். இது அதிகாலைத் தொழுகையை நிறைவு செய்கின்றது.

நன்பகல் தொடர்புத்தொழுகை (லுஹர்):

இந்த தொடர்புத்தொழுகை நான்கு பாகங்களைக் (ரக அத்) கொண்டது. மேலே விவரிக்கப்பட்டுள்ள அதிகாலை தொடர்புத்தொழுகையின் இரண்டாவது அமர்வில் முதல் தூணாகிய ஷஹாதாவை கூறி நிறைவு செய்த பின்னர் மூன்றாவது ரக அத்திற்காக “அல்லாஹூ அக்பர்” என்று கூறியவாறு எழுந்து நிற்க வேண்டும். முதல் இரண்டு ரக அத்துகளைப் போன்றே மூன்றாவது மற்றும் நான்காவது ரக அத்துகளை நிறைவுசெய்து, நான்காவது ரக அத்தின் அமர்வுநிலையில் ஷஹாதாவை உச்சரித்து வலது புறம் மற்றும் இடது புறம் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறவேண்டும் இத்துடன் நண்பகல் தொடர்புத்தொழுகை நிறைவடைகின்றது.

பிற்பகல் தொடர்புத்தொழுகை (அஸ்ர்):

இந்த தொடர்புத்தொழுகையை நண்பகல் தொடர்புத்தொழுகையைப் போன்றே கடைப்பிடிக்க வேண்டும். நோக்கம் (நிய்யத்து) மட்டுமே வேறாக இருக்க வேண்டும்


சூரிய அஸ்தமன தொடர்புத்தொழுகை (மஹ்ரிப்):

இந்த தொடர்புத்தொழுகை மூன்று ரக அத்துகளைக் கொண்டது. இந்த தொடர்புத்தொழுகையில் மூன்றாவது ரக அத்தில், இரண்டாவது சிரம் பணியும் நிலையை நிறைவு செய்த பின்னர் எழுந்து நிற்காமல் அமர்வு நிலைக்கு சென்றுவிட வேண்டும். பின்னர் ஷஹாதாவை உச்சரித்து இரண்டு புறமும் திரும்பி “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூற வேண்டும் இத்துடன் மஹ்ரிப் தொடர்புத்தொழுகை நிறைவடைகின்றது.

இரவு தொடர்புத்தொழுகை (இஷா):

இந்தத் தொடர்புத்தொழுகை நான்கு ரக அத்துகளைக் கொண்ட நண்பகல் மற்றும் பிற்பகல் ( லுஹர், அஸ்ர் ) தொடர்புத்தொழுகைகளைப் போன்றதே.

தொடர்புத்தொழுகைகளும், குர்ஆனின் கணிதக்குறியீடும்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாலை (குபஜ்ர்), நண்பகல் (லுஹர்), பிற்பகல் (அஸ்ர்), சூரிய அஸ்தமனம் (மஹ்ரிப்), இரவு(இஷா) தொடர்புத்தொழுகைகள் முறையே 2,4,4,3 மற்றும் 4 ரகஅத்துகளைக் கொண்டதாக இருக்கின்றன. இந்த 5 எண்களையும் அடுத்தடுத்து எழுதினால் 24434 என்ற எண்ணை நாம் பெறுகின்றோம். இந்த எண் 19ன் பெருக்குத் தொகையாகும், அதாவது 24434 = 19ஒ1286. குர்ஆனுடைய கணிதக்குறியீட்டின் பொதுவான வகு எண்ணாக ‘19’ இருக்கின்றது. இந்த ‘19’ஐ மிகச் சிறந்த அற்புதங்களில் ஒன்று என்று குர்ஆன் (74:35) கூறுகின்றது. இந்த அற்புதமானது ஒவ்வொரு தொடர்புத் தொழுகைகளுக்கான ரகஅத்களின் எண்ணிக்கைகள், முழுமையாக பாதுகாக்கப்பட்டிருப்பதையும் மேலும் அதன் வரிசை 2,4,4,3,4 தான் என்பதையும் உறுதி செய்கின்றது.

கூட்டு தொடர்புத்தொழுகை

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டாகவும் தொடர்புத்தொழுகைகளை கடைப்பிடிக்கலாம். அவர்களில் ஒருவர் “திறவுகோல்” சூராவை அந்தக் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு கேட்கும் அளவிற்கு போதுமான சப்தத்துடன் ஓதியவராக அந்தக் கூட்டுத் தொடர்புத்தொழுகையை நடத்துவார். மற்ற கூற்றுகள் சப்தமின்றி இருத்தல் வேண்டும். கால தாமதமாக வருகின்ற எவர் ஒருவரும் கூட்டுத் தொடர்புத்தொழுகையில் இடையில் சேர்ந்து கொள்ளலாம். அவ்வாறு சேருகின்ற ஆணோ அல்லது பெண்ணோ அக்குழு கடைப்பிடித்து கொண்டிருக்கின்ற நிலையில் சேர்ந்துகொண்டு பின்னர், அந்த தொடர்புத்தொழுகையின் முடிவில் எழுந்து நின்று விடுபட்ட பகுதியை அவர்கள் நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமை கூட்டு தொடர்புத்தொழுகை ( ஜூம்ஆ )

வெள்ளிக்கிழமை கூட்டுத் தொடர்புத்தொழுகையானது (ஸலாத் அல் ஜூம்ஆ) மிகவும் முக்கியமானதாகும். வெள்ளிக்கிழமை என்று தலைப்பிடப்பட்ட ஒரு சூராவே (சூரா 62) குர்ஆனில் உள்ளது. மேலும் இந்த கூட்டு தொடர்புத்தொழுகையை கடைப்பிடிக்குமாறு அதன் 9வது வசனம் நமக்கு கட்டளையிடுகின்றது. ஒவ்வொரு அடிபணிந்தவரும் (முஸ்லிம்) ஆண், பெண் மற்றும் பிள்ளைகள் அனைவரும் இந்த வெள்ளிக்கிழமை கூட்டுத் தொடர்புத்தொழுகையை கட்டாயம் கடைபிடித்தாக வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கின்றார்.
                வெள்ளிக்கிழமை கூட்டு தொடர்புத்தொழுகையானது மற்ற நாட்களின் நண்பகல் (லுஹர்) தொடர்புத்தொழுகைக்கு மாற்று ஆகும். நான்கு ரக அத்துகளுக்கு பதிலாக வெள்ளிக்கிழமை கூட்டுத் தொடர்புத்தொழுகையானது,

இமாமால் ஆற்றப்படுகின்ற இரண்டு சொற்பொழிவுகளை கவனமாக கேட்பது மற்றும் இரண்டு ரக அத்துகளை கடைப்பிடிப்பது ஆகிய இரு பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சொற்பொழிவையும் “அல்ஹம்துலில்லாஹ்” (புகழ் அனைத்தும் கடவுளுக்கே) “லா இலாஹா இல்லல்லாஹ்” (கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை) என்று கூறியவாறு துவங்க வேண்டும்.  ஒவ்வொரு சொற்பொழிவும் 10-15 நிமிடம் வரை நீடிக்க வேண்டும். மேலும் அந்த சொற்பொழிவானது அங்கு இருக்கும் கூட்டத்தினரின் மொழியில் தான் இருக்க வேண்டும். முதல் சொற்பொழிவின் முடிவில் “தூக்ஷபூ இலல்லாஹ்” என்று கூறி அக்கூட்டத்தினரை வருந்தி திருந்தும் படி கேட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அக்கூட்டத்தினருடன் இமாமும் ஒரு நிமிடம் அமர்ந்து தானும் தவ்பா (வருந்தித்திருந்துதல்) செய்து பின்னர் இரண்டாவது சொற்பொழிவிற்காக எழுந்து நிற்க வேண்டும். இரண்டாவது சொற்பொழிவையும் இமாம், “அல்ஹம்துலில்லாஹ்” (புகழ் அனைத்தும் கடவுளுக்கே) “லா இலாஹா இல்லல்லாஹ்” (கடவுளைத் தவிர வேறு தெய்வம் இல்லை) என்று கூறியவாறு துவங்கி, இந்த சொற்பொழிவின் முடிவில் “அஃகீமஸ் ஸலாஹ்” என்று கூறியவாறு நிறைவு செய்ய வேண்டும். இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் இமாமின் இவ்விரு சொற்பொழிவுகளும் குர்ஆனை குறித்தும் குர்ஆனுடைய கருத்துகளை குறித்துமே இருக்க வேண்டும். பின்னர் அக்கூட்டத்தில் இருந்து ஒருவர் “அனதான்” கூறிய உடன் இரண்டு ரகஅத்துகளைக் கொண்ட தொடர்புத்தொழுகையை இமாம் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு தொடர்புத்தொழுகை முடிந்தவுடன்

தொடர்புத்தொழுகையை நிறைவு செய்த பிறகு, தொடர்புத் தொழுகையை கடைப்பிடித்தவர்கள் (வணக்கசாலிகள்) ஒருவருக் கொருவர் கைகுலுக்கியும், கட்டித் தழுவியும் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளலாம். ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் கூறிக்கொள்வது ஒரு வழக்கமாக இருக்கின்றது. ஏனெனில் நம்முடைய ஆன்மாக்கள் ஊட்டம்பெறுவதற்கும், வளர்ச்சியடைவதற்கும். நமக்கு உதவுகின்ற தொடர்புத்தொழுகைகள் கடவுளிடமிருந்துள்ள ஒரு பரிசாக இருக்கின்றது. இத்தகைய அருள்பாலிக்கப்பட்டதொரு காரியத்தை நிறைவேற்றியதற்காக நிச்சயமாக ஒருவர் வாழ்த்தப்பட வேண்டியவரே.

தொடர்புத் தொழுகை (ஸலாத்) குறித்த குர்ஆன் வசனங்கள்
அங்கசுத்தி (ஒது)

(5:6) நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கும் போது நீங்கள்: (1) உங்கள் முகங்களை கழுவிக் கொள்ளுங்கள், (2) உங்கள் கைகளை முழங்கை கள் வரை கழுவிக்கொள்ளுங்கள், (3) உங்கள் தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள் மேலும் (4) உங்களுடைய பாதங்களைக் கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள். புணர்ச்சியின் பரவசத்தால் நீங்கள் சுத்தமற்றவர்களாக இருந்தால் நீங்கள் குளிக்க வேண்டும். நீங்கள் நோயுற்றோ அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது செரிமானம் சார்ந்த ஏதேனும் கழிவு ஏற்பட்டிருந்தால் (சிறுநீர், மலம் அல்லது வாயு), அல்லது பெண் களுடன் (பாலியல்) உறவு கொண்டுவிட்டால், மேலும் உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனால், சுத்தமான காய்ந்த மணலைத் தொட்டு, பின்னர் உங்களது முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்வதன் மூலம் உலர்ந்த அங்க சுத்தி (தயம்மும்) செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு மார்க்கத்தைக் கடினமானதாக்கு வதற்கு கடவுள் விரும்பவில்லை. நீங்கள் நன்றி உடையோராய் இருக்கும் பொருட்டு உங்களை சுத்தப்படுத்துவதற்கும், உங்கள் மீது தன்னுடைய அருட்கொடையை முழுமையாக்குவதற்குமே அவர் விரும்புகின்றார்.

தொடர்புத் தொழுகை (ஸலாத்) குறித்த குர்ஆன் வசனங்கள்
அங்க சுத்தியை முறிப்பவை எவை

(4:43) நம்பிக்கை கொண்டோரே, போதையில் இருக்கும் போது நீங்கள் தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் கூறுவது இன்னதென்று உங்களுக்குத் தெரிய வேண்டும். நீங்கள் சாலைகளில் பயணத்தில் இருந்தாலன்றி தாம்பத்ய உறவிற்குப் பின்னர் குளிக்காமல் தொழக் கூடாது; நீங்கள் நோயுற்று இருந்தாலோ, அல்லது பிரயாணத்திலிருந்தாலோ அல்லது சிறுநீர் கழித்திருந்தாலோ அல்லது வயிற்றில் இருந்து எதுவும் வெளியேறி இருந்தாலோ (காற்று போன்றவை) அல்லது பெண்களுடன் (தாம்பத்ய) உறவு கொண்டு விட்டாலோ மேலும் தண்ணீர் கிடைக்காவிட்டால், நீங்கள்  சுத்தமான உலர்ந்த மண்ணைத் தொட்டு பிறகு உங்கள் முகங்களையும், கைகளையும் அதைக் கொண்டு தடவி தயம்மும் (உலர்ந்த அங்கசுத்தி) செய்து கொள்ளவும். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.

அசலான ஆதாரம் ஆப்ரஹாமே

(6:162) கூறுவீராக, “என்னுடைய தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்), என்னுடைய வழிபாட்டு முறைகள், என்னுடைய வாழ்வு மற்றும் என்னுடைய மரணம், இவை அனைத்தும் பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-க்கு மட்டுமே முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கின்றது.

குர்ஆனுக்கு முன்னரே தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) வழக்கில் இருந்து வந்தது

(8:35) (கஃபா) ஆலயத்தில் அவர்களின் தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) எல்லாம் பரிகாசம் செய்வதும், மேலும் மக்களை (நெருக்கடி செய்து வெளியில்) விரட்டும் ஒரு வழிமுறையாகவும் இருந்ததேயன்றி அதிகமாக எதுவுமில்லை. ஆகையால், உங்களின் நம்பிக்கையின்மைக்கான தண்டனையை அனுபவியுங்கள்.

(10:87) நாம் மோ(ஸிற்கும் அவருடைய சகோதரருக்கும், “தற்போதைக்கு எகிப்தில் உள்ள உங்களது வீடுகளைப்பராமரித்துக் கொண்டு உங்கள் வீடுகளையே ஆலயங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) பேணிவாருங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி வழங்குங்கள்” என்று உள்ளுணர்வு அளித்தோம்.

(14:37) “எங்கள் இரட்சகரே, நான், எனது குடும்பத்தின் ஒரு பகுதியை உமது புனித வீட்டின் அருகில், தாவரங்களற்ற இப்பள்ளத்தாக்கில் குடியேற்றி யிருக்கின்றேன். எங்கள் இரட்சகரே, அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) நிறை வேற்ற வேண்டியவர்களாக உள்ளனர், எனவே மனிதர்களைக் கூட்டமாக அவர்களோடு சந்திக்கச் செய்வீராக, மேலும் அவர்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கும் பொருட்டு, அனைத்துக் கனிவர்க்கங்களையும் அவர்களுக்கு வழங்குவீராக.

தொடர்புத்தொழுகைகள்: கடவுளிடமிருந்து பரிசு

(14:40) “என் இரட்சகரே, தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒருவராக என்னையும், அத்துடன் என் பிள்ளைகளையும் ஆக்குவீராக. எங்கள் இரட்சகரே, தயவு கூர்ந்து என் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பீராக. (என்று ஆப்ரஹாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்)

ஆப்ரஹாம்: இஸ்லாத்தின் (அடிபணிதல்) மார்க்கக் கடமைகள் அனைத்தையும் சேர்ப்பித்தவர்

(21:73) நம்முடைய கட்டளைகளுக்கு இணங்க வழி நடத்திய இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம், மேலும் நன்னெறியான செயல்கள் செய்வது எப்படி என்பதையும், தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கடைப்பிடிப்பது எப்படி என்பதையும் நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். நமக்கு, அர்ப்பணித்துக் கொண்ட வணக்கசாலிகளாக அவர்கள் இருந்தனர். (என்று ஐசக் மற்றும் ஜக்கப்பை குறித்து கடவுள் கூறுகின்றார்)

பிற்பகல் தொடர்புத் தொழுகை (அஸ்ர்)

நீங்கள் தொடர்புத் தொழுகைகளை கவனத்துடன் கடைபிடிக்கவேண்டும்

(2:238) நீங்கள் தொடர்பு தொழுகைகளை விடாது கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமாக நடுத் தொழுகையை,மேலும் கடவுள்-க்கு முழுமையாக உங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும்.

நயவஞ்சகர்கள்

(4:142) நயவஞ்சகர்கள் தாங்கள் கடவுள்-ஐ ஏமாற்றிக் கொண்டிருப்பதாக எண்ணுகின்றார்கள், ஆனால் அவர்தான் அவர்களை அவ்வாறு வழி நடத்துகின்றார். தொடர்புத் தொழுகைக்காக (ஸலாத்) அவர்கள் எழுந்து நிற்கும் போது, அவர்கள் சோம்பலாக எழுந்து நிற்கின்றார்கள். அது ஏனெனில் அவர்கள் மக்களுக்கு முன்னால் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே இதைச் செய்கின்றார்கள், மேலும் அரிதாகவே அவர்கள் கடவுள்-ஐப்பற்றி நினைக்கின்றார்கள்.

முஹம்மதிற்கு முன்பே தொடர்புத் தொழுகை வழக்கத்தில் இருந்தது

(9:54) அவர்கள் செலவு செய்வதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தடுத்தது எதுவென்றால், அவர்கள் கடவுள்-ஐயும் மேலும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்ததும், மேலும் அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கும் போது, அவற்றை அவர்கள் சோம்பலுடன் கடைப்பிடித்ததும், மேலும் அவர்கள் தானம் வழங்கிய போது, மனமின்றி அவர்கள் அதைச் செய்ததுமேயாகும்.
(74:43) அவர்கள் கூறுவார்கள், “நாங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வில்லை.
(75:31) ஏனெனில் அவன் தர்மத்தையோ, அன்றி தொடர்புத்தொழுகைகளையோ (ஸலாத்) கடைபிடிக்கவில்லை.
(77:48) “குனிந்து வழிபடுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வழிபடுபவதில்லை.
(107:4) மேலும் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப்பிடிப்பவர்களுக்குக் கேடுதான்-
(107:5) தங்களுடைய தொழுகைகளில் முற்றிலும் கவனமற்றவர்களாக இருக்கின்றவர்கள்.

நம்பிக்கையாளர்களின் குணாதிசயங்கள்
மூன்று வகையான மனிதர்கள் (1) நன்னெறியாளர்கள்

(2:3) அவர்கள்  காண முடியாதவற்றை நம்புபவர்கள். தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், மேலும் அவர்களுக்கான நம்முடைய** வாழ்வாதாரங்களில் இருந்து அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.

நன்னெறி விவரிக்கப்படுகின்றது

(2:177) நன்னெறி என்பது, உங்கள் முகங்களை கிழக்கையோ அல்லது மேற்கையோ, நோக்கித் திருப்புவதில் இல்லை. நன்னெறியாளர்கள் என்பவர்கள் கடவுள்-ஐ, இறுதிநாளை, வானவர்களை, வேதத்தினை, மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களை, நம்பிக்கை கொண்டவர்கள். இன்னும் அவர்கள் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், தேவையுள்ளோருக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுவிப்பதற்கும், மகிழ்ச்சியுடன் பணம் தருவார்கள், இன்னும் அவர்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிப்பார்கள்,கடமையான தர்மத்(ஜகாத்) தையும் தருவார்கள், இன்னும் அவர்கள் வாக்குக் கொடுத்த போதெல்லாம் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவார்கள், இன்னும் அவர்கள் அடக்குமுறை, கஷ்டம் மற்றும் போர் இவற்றை எதிர் கொண்டால் உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பார்கள். இவர்களே உண்மையாளர்கள்; இவர்களே நன்னெறி யாளர்கள்.


(4:162) அவர்களுக்கிடையில் அறிவில் நன்கு ஊன்றியவர்கள், மற்றும் நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உமக்கு என்ன வெளிப்படுத்தப் பட்டதோ அதையும், மேலும் உமக்கு முன்னர் என்ன வெளிப்படுத்தப்பட்டதோ அதையும் நம்புகின்றார்கள். அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடிப்பவர்கள், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுப்பவர்கள்; அவர்கள் கடவுள் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்பவர்கள் இத்தகையவர்களுக்கு நாம் ஒரு மகத்தான வெகுமதி வழங்குவோம்.


(6:92) மிக முக்கியமான சமூகத்தையும்* மேலும் அதைச் சுற்றியுள்ள அனைவரையும் நீர் எச்சரிக்கை செய்யும் பொருட்டு, முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துகின்ற இதுவும், நாம் வெளிப்படுத்தியுள்ள ஒரு புனிதமான வேதமே ஆகும். எவர்கள் மறுவுலகை நம்புகின்றார்களோ அவர்கள் இதை (வேதத்தை) நம்புவார்கள், மேலும் தொடர்புத்தொழுகைகளையும் (ஸலாத்) கடைபிடிப்பார்கள்.


(7:170) வேதத்தை உறுதியாகப் பின்பற்றியும் மேலும் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடை பிடித்தும் வருபவர்கள், நாம் பக்தியுள்ளவர்க ளுக்கு வெகுமதியளிக்க ஒருபோதும் தவற மாட்டோம். (8:3) அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம்முடைய வாழ்வாதாரங்களிலிருந்துஅவர்கள் தானம் வழங்குவார்கள். (9:5) புனித மாதங்கள் கடந்த உடன், (அவர்கள் சமாதானம் செய்து கொள்ள மறுத்தால்) இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களை நீங்கள் போரில் எதிர் கொள்ளும்போது நீங்கள் அவர்களைக் கொல்லலாம், அவர்களைத் தண்டிக்கலாம், மேலும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தடுக்கலாம். அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) கடைப்பிடித்து மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுத்தால், அவர்களைச் செல்ல நீங்கள் விட்டு விட வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
வருந்தித்திருந்துதல்: பழைய பாவங்களைத் துடைத்தெடுத்து விடுகின்றது
(9:11) அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வந்தால், அப்போது அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவர். அறிந்து கொள்ளும் மக்களுக்கு இவ்வாறு நாம் வெளிப்பாடுகளை விளக்குகின்றோம்.

(9:18) கடவுள்-ன் மீதும், இறுதிநாளின் மீதும், நம்பிக்கைக் கொண்டோரும் மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடித்து, கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுத்து வருவோரும், மேலும் கடவுள்-ஐத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்களும் மட்டுமே கடவுள்-ன் மஸ்ஜிதுகளில் அடிக்கடி பிரவேசிக்கக் கூடியவர்கள். இவர்கள் நிச்சயமாக வழிகாட்டப்பட்டவர்களில் உள்ளவர்கள் ஆவார்கள்.
வெற்றி பெற்றவர்கள்
(9:71) நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்கள் ஆவர். அவர்கள் நன்னெறியை ஆதரிக்கின்றனர், மேலும் தீமையைத் தடுக்கின்றனர், அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கின்றனர், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுக்கின்றனர், மேலும் அவர்கள் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றனர். இவர்கள் கடவுள்-உடைய கருணையால் பொழியப்படுவார்கள். கடவுள் சர்வ வல்லமை யுடையவராகவும், ஞானம் மிக்கவராகவும் இருக்கின்றார்.

(13:22) அவர்கள் தங்கள் இரட்சகரைத் தேடுவதில் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்கின்றார்கள், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கின்றார்கள், நம் வாழ்வாதாரங்களில் அவர்களுக்குரியதிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்கள், மேலும் நல்லதைக் கொண்டு கெட்டதை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் மிகச்சிறந்த தங்குமிடத்திற்குத் தகுதி பெற்று விட்டார்கள்.

(20:14) “நான்தான் கடவுள்; என்னுடன் வேறு தெய்வம் இல்லை. என்னை மட்டுமே நீர் வழிபட வேண்டும், மேலும் என்னை நினைவு கூர்வதற்காக தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பீடிக்க வேண்டும்.

(22:35) கடவுள் என்று குறிப்பிடப்படும்போது நடுங்கி விடும் இதயம் கொண்டவர்கள் அவர்கள்தான், துன்பமான காலத்திலும் அவர்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பார்கள், அவர்கள் தொடர்புத்தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம் முடைய வாழ்வாதாரங்களில் இருந்து, அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.
ஆப்ரஹாம்: இஸ்லாத்தின் ஆரம்பத்தூதர்
(22:78) நீங்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட வேண்டியவாறு அவருக்காக நீங்கள் பாடுபட வேண்டும். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் மேலும் உங்கள் தந்தை ஆப்ரஹாமின் மார்க்கமாகிய-உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர்தான் துவக்கத்தில் உங்களுக்கு “அடிபணிந்தோர்” எனப் பெயரிட்டார். இவ்விதமாக, தூதர் உங்களுக்கிடையில் ஒரு சாட்சியாகப் பணியாற்றிட வேண்டும், மேலும் நீங்கள் மக்களுக்கிடையில் சாட்சிகளாக பணியாற்றிட வேண்டும். ஆகையால், நீங்கள் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிக்கவும் மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வரவும், மேலும் கடவுள்-ஐப் பலமாகப் பற்றிக் கொள்ளவும் வேண்டும்; அவர்தான் உங்கள் இரட்சகராகவும் மிகச்சிறந்த இரட்சகராகவும், மேலும் மிகச்சிறந்த ஆதரவாளராகவும் இருக்கின்றார்.

(22:41) அவர்கள் யாரென்றால், பூமியின் ஆட்சியாளர்களாக நாம் அவர்களை நியமித்தால், அவர்கள் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிலைநாட்டுவார்கள், மேலும் நன்னெறியை ஆதரிப்பார்கள் மேலும் தீமையைத் தடுப்பார்கள். கடவுள் தான் முடிவான அரசர் ஆவார்.

(23:9) மேலும் அவர்கள் தங்களுடைய தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) ஒழுங்காகக் கடைப்பிடிப்பார்கள்.
மஸ்ஜிதிற்கு அடிக்கடி வருபவர்கள்
(24:37) தொழில் அல்லது வியாபாரத்தினால் கடவுள்-ஐ நினைவு கூர்வதிலிருந்து திசை திருப்பப்படாத மக்கள்; அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பார்கள், மேலும் மனங்களும் மற்றும் கண்களும் திகிலடைந்து விடும் அந்நாள் குறித்து அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

(27:3) அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் அவர்கள், மறுவுலகைக் குறித்து, முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.

(31:4) அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் மறுவுலகைக் குறித்து, அவர்கள் முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.

(35:18) எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவின் பாவத்தைச் சுமக்க முடியாது. பாவங்களால் சுமையேற்றப்பட்ட ஒரு ஆன்மா தனது சுமையில் ஒரு பகுதியைச் சுமந்து கொள்ளுமாறு மற்றொன்றை இறைஞ்சினாலும், அவர்கள் உறவினர்களாக இருந்த போதிலும், வேறு எந்த ஆன்மாவும் அதன் எந்தப் பகுதியையும், சுமக்க இயலாது. தங்களுடைய தனிமையில் தனித்திருக்கும் போதிலும், தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருப்பவர்கள், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே உமது எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளும் மக்கள் ஆவர். தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் எவராயினும் தன் சொந்த நலனிற்காகவே அவ்வாறு செய்கின்றார். இறுதி விதி கடவுள் வசமே உள்ளது.

(35:29) நிச்சயமாக, கடவுள்-ன் புத்தகத்தை ஓதி வருபவர்கள், தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், மேலும் அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களில் இருந்து - இரகசியமாகவும் பகிரங்கமாகவும் - செலவு செய்பவர்கள், ஒரு போதும் நஷ்டமடையாத ஒரு முதலீட்டை செய்பவர்களாக இருக்கின்றனர்.

(42:28) அவர்தான் அவர்கள் விரக்தியுற்ற பின்னர் மழையை இறக்கி அனுப்புகின்றவர், மேலும் தன் கருணையைப் பரப்புகின்றார். அவர்தான் ஒரே எஜமானராகவும், மிகுந்த புகழுக்குரியவராகவும் இருக்கின்றார்.

(70:23) எப்பொழுதும், அவர்களுடைய தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள்.

(70:34) அவர்கள் தங்களுடைய தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) சரியான நேரத்தில் சீராகக் கடைப்பிடிக்கின்றனர்.

(87:14) தன் ஆன்மாவை மீட்டுக் கொள்பவர்தான் உண்மையில் வெற்றி பெற்றவர் ஆவார்.

(87:15) தன்னுடைய இரட்சகரின் பெயரை நினைவில் கொள்வது மேலும் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பதன் மூலம்.

(108:2) ஆகையால், நீர் உம்முடைய இரட்சகரை தொழவும் (ஸலாத்), மேலும் தர்மம் கொடுக்கவும் வேண்டும்.
வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) கூட்டுத் தொடர்புத் தொழுகை
நம்பிக்கையாளர்கள் அனைவருக்குமான முக்கியக் கட்டளைகள்
(62:9) நம்பிக்கை கொண்டோரே, வெள்ளிக்கிழமை அன்று கூட்டுத்தொழுகை (ஸலாத் அல்-ஜுமுஆ) அறிவிக்கப்படும் பொழுது, கடவுள்-ஐ நினைவு கூர்வதற்காக நீங்கள் விரைந்து செல்லவும், மேலும் வேலைகள் அனைத்தையும் விட்டு விடவும் வேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும்.

(62:10) தொழுகை முடிந்து விட்டவுடன், கடவுள்-ன் வெகுமதிகளைத் தேடுவதற்கு பூமி முழுவதும் நீங்கள் பரவிச் செல்லலாம், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, கடவுள்-ஐ அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள்.

(62:11) அவர்களில் சிலர் ஒரு வியாபாரப் பரிவர்த்தனையையோ, அல்லது பொழுதுபோக்கினையோ காண நேரும்போது, உம்மை நின்று கொண்டிருக்க விட்டுவிட்டு அவர்கள் அதன்பால் விரைந்து சென்று விடுகின்றனர்! “கடவுள் வசமிருப்பது பொழுதுபோக்கினையோ அல்லது வியாபாரத்தையோ விட மிகவும் மேலானதாகும். கடவுள்தான் வழங்குபவர்களில் மிகச் சிறந்தவராக இருக்கின்றார்” என்று கூறுவீராக.
தொடர்புத்தொழுகைகளை விட்டு விலகுதல்
(62:9) நம்பிக்கை கொண்டோரே, வெள்ளிக்கிழமை அன்று கூட்டுத்தொழுகை (ஸலாத் அல்-ஜுமுஆ) அறிவிக்கப்படும் பொழுது, கடவுள்-ஐ நினைவு கூர்வதற்காக நீங்கள் விரைந்து செல்லவும், மேலும் வேலைகள் அனைத்தையும் விட்டு விடவும் வேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும்.

(62:10) தொழுகை முடிந்து விட்டவுடன், கடவுள்-ன் வெகுமதிகளைத் தேடுவதற்கு பூமி முழுவதும் நீங்கள் பரவிச் செல்லலாம், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, கடவுள்-ஐ அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள்.

(62:11) அவர்களில் சிலர் ஒரு வியாபாரப் பரிவர்த்தனையையோ, அல்லது பொழுதுபோக்கினையோ காண நேரும்போது, உம்மை நின்று கொண்டிருக்க விட்டுவிட்டு அவர்கள் அதன்பால் விரைந்து சென்று விடுகின்றனர்! “கடவுள் வசமிருப்பது பொழுதுபோக்கினையோ அல்லது வியாபாரத்தையோ விட மிகவும் மேலானதாகும். கடவுள்தான் வழங்குபவர்களில் மிகச் சிறந்தவராக இருக்கின்றார்” என்று கூறுவீராக.
தொடர்புத்தொழுகைகளில் கடவுளின் பெயரைத் தவிர வேறு எந்த பெயரையும் கூற கூடாது
(6:162) கூறுவீராக, “என்னுடைய தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்), என்னுடைய வழிபாட்டு முறைகள், என்னுடைய வாழ்வு மற்றும் என்னுடைய மரணம், இவை அனைத்தும் பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-க்கு மட்டுமே முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கின்றது.

(72:18) வழிபாட்டுத் தலங்கள் கடவுள்-க்குரியவை; கடவுள்-உடன் வேறு எவரொருவரையும் அழைக்காதீர்கள்.
தொடர்புத்தொழுகைகளை கடைபிடிக்கும்படி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு அறிவுறுத்த வேண்டும்
(19:31) “நான் செல்லுமிடமெல்லாம் அருள்பாலிக்கப் பட்டவராக என்னை அவர் ஆக்கியிருக்கின்றார், மேலும் நான் வாழும் காலமெல்லாம் என்னைத் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறைவேற்றக் கட்டளையிட்டிருக்கின்றார். (என்று இயேசு கூறுகின்றார்)

(19:55) அவர் தொடர்புத்தொழுகைகளையும் (ஸலாத்) கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறைவேற்றும்படி, தன் குடும்பத்தாரை ஏவுபவராக இருந்தார்; அவருடைய இரட்சகரிடம்ள, ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராக அவர் இருந்தார். (என்று இஸ்மவேலைக் குறித்து கடவுள் கூறுகின்றார்)
பெற்றோர்களின் பொறுப்பு
(20:132) தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிக்கவும், மேலும் அதை செய்து வருவதில் உறுதியோடு தொடர்ந்திருக்கவும் உம் குடும்பத்தாரிடம் நீங்கள் கட்டளையிட வேண்டும். உங்களிடம் எந்த வாழ்வாதாரங்களையும் நாம் கேட்கவில்லை; நாமே உங்களுக்கு வழங்குபவர்களாக இருக்கின்றோம். மகத்தான இறுதி வெற்றி நன்னெறியாளருக்கே உரியது.

(31:17) “என் மகனே, நீ தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். நீ நன்னெறியை ஆதரிப்பதுடன் மேலும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும், மேலும் இன்னல்களை எதிர் கொள்ளும்போது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். இவை மிகவும் கண்ணியமான பண்புகளாகும். (என்று லுக்மான் தன் மகனுக்கு உபதேசித்தார்)
தொடர்புத்தொழுகைகள் மூலம் உதவி தேட வேண்டும்
(2:45) உறுதிப்பாடு மற்றும் தொடர்புத் (ஸலாத்) தொழுகைகளின் மூலம் நீங்கள் உதவி தேட வேண்டும். இது உண்மையில் கடினமானதே, எனினும் பயபக்தியுடையோருக்கு அல்ல,

(2:153) நம்பிக்கை கொண்டோரே, உறுதிப்பாடு மற்றும் தொடர்பு தொழுகைகளைக் (ஸலாத்) கொண்டு உதவி தேடுங்கள். உறுதியான நிலையில் தொடர்ந்து இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.
கடவுளின் பாதுகாப்பிற்குள் இருப்பதற்கான நிபந்தனைகள்
(5:12) இஸ்ரவேலின் சந்ததியினரிடமிருந்து ஒரு உடன்படிக்கையை கடவுள் எடுத்திருந்தார், மேலும் அவர்களுக்கிடையில் பன்னிரண்டு குலத் தலைவர்களை நாம் எழுப்பினோம், மேலும் கடவுள், “தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுத்து, மேலும் என்னுடைய தூதர்களின் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களை கண்ணியம் செய்து, மேலும் நன்னெறியினை கடனாக கடவுள்-க்கு தொடர்ந்து கொடுக்கும் வரையிலும் நான் உங்களுடன் இருக்கின்றேன். அதன் பின்னர் நான் உங்களுடைய பாவங்களைத் தள்ளுபடி செய்வேன், மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களில் உங்களை பிரவேசிக்கச் செய்வேன். இதன் பின்னரும் எவனொருவர் நம்ப மறுக்கின்றாரோ, அவர் உண்மையில் நேரான பாதையிலிருந்து வழி தவறி விட்டார்” என்று கூறினார்.

(5:55) உங்களுடைய உண்மையான நண்பர்கள் யாரென்றால் கடவுள்-ம் மற்றும் அவருடைய தூதரும் மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, மற்றும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுத்து வரக்கூடிய, நம்பிக்கையாளர்களும்தான், மேலும் அவர்கள் குனிந்து வழிபடுகின்றனர்.
தொடர்புத் தொழுகைகள் (ஸலாத் ) பாதுகாக்கின்றன
(29:45) வேதத்தில் உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நீங்கள் ஓதி வரவும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் வேண்டும், ஏனெனில் தொடர்புத் தொழுகைகள் தீமைகளையும் மற்றும் ஒழுக்கக் கேட்டையும் தடுக்கின்றன. ஆனால் (ஸலாத் மூலம்) கடவுள்-ஐ நினைவு கூர்வதே மிகவும் முக்கியமான குறிக்கோளாகும்.* நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் அறிகின்றார்.
போர் முன்னெச்சரிக்கைகள்
(4:102) அவர்களுடன் நீர் இருக்கும்போது, மேலும் அவர்களுக்கு தொடர்புத்தொழுகை (ஸலாத்) நடத்தினால், உங்களில் சிலர் பாதுகாப்பிற்கு நிற்கட்டும். அவர்கள் தங்களது ஆயுதங்களை ஏந்திக்கொள்ளட்டும், மேலும் நீர் சிரம் பணியும் சமயத்தில் உங்களுக்கு பின்புறமாக அவர்கள் நின்று கொள்ளட்டும். பின்னர், தொழாத மற்ற பிரிவினர் தங்களுடைய முறையை எடுத்துக் கொண்டு தொழுகையினை உம்முடன் சேர்ந்து தொழட்டும், அதேசமயம் மற்றவர்கள் பாதுகாப்பிற்கு நின்றவாறு தங்கள் ஆயுதங்களை ஏந்தி நிற்கட்டும். நம்ப மறுப்பவர்கள் உங்களை ஒரே தடவையில் தாக்கி முடிப்பதற்காக நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் தளவாடங்களின் மீது கவனமின்றி இருப்பதைக் காண விரும்புகின்றனர். மழையினாலோ அல்லது காயத்தினாலோ, உங்களுக்கு இடையூறு ஏற்பட்டால், நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பட்சத்தில், உங்களது ஆயுதங்களைக் கீழே வைப்பதில் உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. கடவுள் நம்பமறுப்பவர்களுக்கு இழிவு மிக்கதொரு தண்டனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றார்.
தொடர்புத் தொழுகைகளைத் (ஸலாத்) தொலைத்து விடுதல்
(19:59) அவர்களுக்குப் பின்னர், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொலைத்து விட்ட, மேலும் தங்களுடைய காம இச்சையைப் பின்பற்றிய தலைமுறையினரை அவர் மாற்றியமைத்தார். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.

அதிகாலை தொடர்புத் தொழுகை (குபஜ்ர்) / சூரிய அஸ்தமன தொழுகை (மஹ்ரிப்) இரவுத் தொடர்புத் தொழுகை (இஷா)
ஐந்து தொழுகைகளில் மூன்று
(11:114) பகலின் இரு முனைகளிலும், இரவின் பொழுதும் நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். நன்னெறியான செயல்கள் தீய செயல்களைத் துடைத்தெடுத்து விடுகின்றன. கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்.
நன்னடத்தைக் கோட்பாடுஇரு தொழுகைகள் பெயர் குறிப்பிடப்படுகின்றன
(24:58) நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய ஊழியர்களும் மேலும் பருவம் அடையாத குழந்தைகளும் (உங்களுடைய அறைகளில் நுழைவதற்கு முன்னர்) அவசியம் அனுமதி கேட்க வேண்டும். இது மூன்று சந்தர்ப்பங்களில் செய்யப்பட வேண்டும் - அதிகாலைத் தொழுகைக்கு முன்னர், பகலில் ஓய்விற்காக நீங்கள் உங்களுடைய ஆடைகளை மாற்றியிருக்கும் பொழுது, மேலும் இரவுத் தொழுகைக்குப் பிறகு. இவை உங்களுக்கு மூன்று அந்தரங்க நேரங்களாகும். மற்றச் சமயங்களில், நீங்கள் ஒருவர் மற்றவருடன் கலந்திருப்பதில் உங்கள் மீதோ அவர்கள் மீதோ தவறு இல்லை. கடவுள் இவ்விதமாக இந்த வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவராகவும், ஞானம் மிக்கவராகவும் இருக்கின்றார்.
நண்பகல் தொடர்புத் தொழுகை (லுஹர்)
(17:78) நீங்கள் நண்பகலில் சூரியன் அதன் உச்சியிலிருந்து சாய்ந்து அஸ்தமனத்தை நோக்கி அது நகரும் பொழுது தொடர்புத் தொழுகையைக் (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். இன்னும் அதிகாலையில் நீங்கள் குர்ஆன் (ஓதுதலை) கடைப் பிடிக்கவும் வேண்டும். அதிகாலையில் குர்ஆன் (ஓதுதல்) சாட்சி அளிப்பதாக இருக்கின்றது.

(2:43) நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்க வேண்டும், மேலும் குனிந்து வழிபடுவோருடன் சேர்ந்து குனிந்து வழிபட வேண்டும்.
கட்டளைகள்
(2:83) இஸ்ரவேலின் சந்ததியினரிடம் நாம்: “கடவுள்-ஐ தவிர எவரையும் நீங்கள் வழிபடக்கூடாது , உங்களுடைய பெற்றோரை கண்ணியப்படுத்த வேண்டும். உங்கள் உறவினர்களை, அநாதைகளை, மற்றும் ஏழைகளை மதிக்க வேண்டும். மக்களை நீங்கள் இணக்கத்துடன் நடத்த வேண்டும். நீங்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வரவும் வேண்டும்”, என்று ஓர் உடன்படிக்கை செய்தோம். ஆனால், உங்களில் சிலரைத் தவிர, நீங்கள் திரும்பி விட்டீர்கள், மேலும் வெறுப் புற்றவர்களாக ஆகிவிட்டீர்கள்.

(2:110) நீங்கள் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும். மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும் வேண்டும். உங்கள் ஆன்மாவிற்காக எந்த நன்மையை நீங்கள் முற்படுத்தி அனுப்பினாலும் அதனை நீங்கள் கடவுள்-இடம் காண்பீர்கள். கடவுள் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.
தெய்வீக உத்தரவாதம்
(2:277) எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி மேலும் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கவனமாக கடைப் பிடித்து மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுக்கின்றார்களோ, அவர்கள், அவர் களுடைய வெகுமதியை அவர்களுடைய இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

(4:77) “நீங்கள் சண்டையிட வேண்டியதில்லை; நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் தொடர்புத்தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பதும் மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுப்பதுமே” என்று கூறப்பட்டவர்களிடம், பின்னர், சண்டையிடும்படி அவர்களுக்கு கட்டளையிடப்பட்டபோது, அவர்கள் கடவுள்-க்கு அஞ்சுவது போல் மக்களுக்கு அவர்கள் அஞ்சியதை, அல்லது அதை விடவும் அதிகமாக அஞ்சியதை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் “எங்கள் இரட்சகரே, ஏன் இந்த சண்டையை எங்கள் மீது கட்டாயப் படுத்தினீர்? நீர் மட்டும் எங்களுக்குச் சிறிது காலம் ஓய்வளித்திருந்தால்,” என்று கூறினார்கள். “இந்த உலகின் பொருட்கள் ஒன்றுமில்லை, அதே சமயம் நன்னெறியாளர்களுக்கு மறுவுலகம் மிகவும் சிறந்தது, மேலும் நீங்கள் ஒருபோதும் சிறிதளவும் அநீதத்தையும் அனுபவிக்கமாட்டீர்கள்” என்று கூறுவீராக.

(6:72) “இன்னும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடியுங்கள், மேலும் அவரிடம் பயபக்தியோடிருங்கள் - அவருக்கு முன்னால் தான் (கணக்கு வழக்கிற்காக) நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.”
முக்கியக் கட்டளைகள்
(14:31) வர்த்தகமோ, அன்றி உறவுமுறைச் சலுகைகளோ இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன்னர், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து வருமாறும், மேலும் இரகசியமாகவும் மற்றும் பகிரங்கமாகவும், அவர்களுக்குரிய நம் வாழ்வாதாரங்களில் இருந்து (தர்மம்) கொடுத்து வருமாறும் நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம் உபதேசிப்பீராக.
வெற்றியின் சூத்திரம்
(24:56) நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்துவரவும், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்)
(29:45) வேதத்தில் உமக்கு வெளிப்படுத்தப் பட்டவற்றை நீங்கள் ஓதி வரவும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் வேண்டும், ஏனெனில் தொடர்புத் தொழுகைகள் தீமைகளையும் மற்றும் ஒழுக்கக் கேட்டையும் தடுக்கின்றன. ஆனால் (ஸலாத் மூலம்) கடவுள்-ஐ நினைவு கூர்வதே மிகவும் முக்கியமான குறிக் கோளாகும்.* நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் அறிகின்றார்.

(30:31) நீங்கள் அவருக்கு அடிபணியவும், அவரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கவும் வேண்டும், மேலும்-நீங்கள் என்ன செய்தாலும்-இணைத்தெய்வ வழிபாட்டிற்குள் மட்டும் எக்காலத்திலும் விழுந்து விடாதீர்கள்.

(33:33) நீங்கள் உங்களுடைய வீடுகளில் தங்கியிருக்க வேண்டும், மேலும் பழைய அறியாமை நாட்களில் நீங்கள் செய்து கொண்டிருந்ததைப் போல், மக்களுடன் அளவிற்கதிகமாகக் கலக்காதீர்கள். நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும், மேலும் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். புனித ஆலயத்தைச் சுற்றி வசிப்பவர்களே, கடவுள் உங்களிடமிருந்து அனைத்துத் தீமைகளையும் நீக்கவும், மேலும் உங்களை முழுமையாகத் தூய்மைப் படுத்தவுமே விரும்புகின்றார்.

(58:13) கலந்தாலோசிப்பதற்கு முன்னர் நீங்கள் தர்மம் கொடுக்கத் தவறிவிட்டு, அதற்குப் பின்னர் வருந்தித்திருந்தினால், கடவுள் உங்களுடைய வருந்தித்திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றார். நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கவும், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும், மேலும் கடவுள் மற்றும் அவரு டைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

(73:20) இரவுப் பொழுதினில் மூன்றில் இரண்டு பாகம், அல்லது அதில் பாதி, அல்லது அதில் மூன்றில் ஒரு பாகம் நீர் தியானிக்கின்றீர், மேலும் உம்முடன் நம்பிக்கை கொண்ட சிலரும் அவ்வாறே செய்கின்றனர் என்பதை உம்முடைய இரட்சகர் அறிகின்றார். இரவையும் பகலையும் கடவுள் வடிவமைத்துள்ளார், மேலும் எப்பொழுதும் உங்களால் இதனைச் செய்ய இயலாது என்பதையும் அவர் அறிகின்றார். அவர் உங்களை மன்னித்து விட்டார். அதற்குப் பதிலாக, குர்ஆனிலிருந்து உங்களால் இயன்ற வரை நீங்கள் படிக்க வேண்டும். உங்களில் சிலர் நோயுற்றிருக்கக் கூடும், மற்றவர்கள் கடவுள்-ன் வாழ்வாதாரங்களைத் தேடியவாறு பிரயாணத்தில் இருக்கக் கூடும், மேலும் மற்றவர்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடும் என்பதை அவர் அறிகின்றார். அதிலிருந்து உங்களால் இயன்றவரை நீங்கள் படிக்க வேண்டும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும், மேலும் நன்னெறியெனும் ஒரு கடனைக் கடவுள்-க்குக் கடனளிக்கவும் வேண்டும். உங்களுடைய ஆன்மாக்களுக்காக நீங்கள் முற்படுத்தி அனுப்பி வைக்கின்ற நல்லது எதுவாயினும், அதனை மிகச் சிறந்ததாகவும் தாராளமாக வெகுமதியளிக்கப்பட்டதாகவும் கடவுள்-இடம் நீங்கள் காண்பீர்கள். மேலும் பாவமன்னிப்பிற்காக கடவுள்-இடம் இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

(98:5) அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதெல்லாம், மார்க்கத்தைப் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவாறு, கடவுள்-ஐ வழிபடவேண்டும், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. பூரணமான மார்க்கம் இத்தகையதேயாகும்.
கிப்லா
(2:142) மக்களுக்கிடையிலுள்ள மூடர்கள் “அவர்களுடைய கிப்லாவின் திசையை அவர்கள் ஏன் மாற்றினார்கள்?” என்று கூறக்கூடும், “கிழக்கும், மேற்கும் கடவுள்-க்கே உரியது; நேர்வழியை விரும்புகின்ற எவரையும் அவர் வழி நடத்துகின்றார்” என்று கூறுவீராக.

(2:143) இவ்விதமாக மக்களுக்கிடையில் சாட்சியாளர் களாக நீங்கள் பணியாற்றும் பொருட்டும், மேலும் உங்களுக்கிடையில் சாட்சியாளராக தூதர் பணியாற்றும் பொருட்டும், நாம் உங்களை ஒரு நடு நிலையான சமூகமாக ஆக்கினோம். தூதரை விட்டும் தங்கள் குதிகால்களின் மீது திரும்பிவிடுவோரிலிருந்து, தூதரை உடனடியாகப் பின்பற்றக் கூடியவர்களைப் பிரித்தறிவிப்பதற்காகவே நாம் உம்முடைய முதல் கிப்லாவின் திசையை மாற்றினோம். அது ஒரு கடினமான சோதனைதான் எனினும் கடவுள்-ஆல் வழி நடத்தப் பட்டோருக்கல்ல. கடவுள் உங்களுடைய வழிபாட்டை ஒரு போதும் வீணாக்கி விடுவதில்லை. கடவுள் மனிதர்கள் பால் மிக்க இரக்கமிக்கவராக, மிக்க கருணையாளராக உள்ளார்.
கிப்லா மெக்காவிற்கு மீண்டும் திருப்பப்பட்டது
(2:144) (சரியான திசையைத் தேடிக் கொண்டிருந்த நிலையில்) நீர் உமது முகத்தை வானத்தின் பக்கம் திருப்புவதை நாம் கண்டோம். உம்மை திருப்திபடுத்தும் ஒரு கிப்லாவை நாம் இப்பொழுது நியமிக்கின்றோம். இனிமேல் புனித மஸ்ஜிதை நோக்கி உமது முகத்தை திருப்பிக் கொள்ளவேண்டும். நீங்கள் எங்கிருந்த போதிலும், நீங்கள் அனைவரும் அதனை நோக்கியே உங்களது முகங்களை திருப்பிக் கொள்ள வேண்டும். முந்திய வேதத்தைப் பெற்றவர்கள் இது அவர்களுடைய இரட்சகரிட மிருந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள். அவர்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் கடவுள் அறியாதவர் அல்ல.

(2:145) வேதத்தை பின்பற்றுபவர்களிடம் எல்லா வகையான அற்புதங்களையும் நீர் காட்டிய போதி லும், உங்களுடைய கிப்லாவை அவர்கள் பின்பற்றமாட்டார்கள். அன்றி அவர்களுடைய கிப்லாவை நீங்களும் பின்பற்ற வேண்டாம். அவர்கள்கூட ஒருவர் மற்றவருடைய கிப்லாவை பின்பற்றுவதில்லை. அறிவு உம்மிடம் வந்து விட்ட பிறகும் நீர் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கினால், நீர் வரம்பு மீறியவர்களுடன் சேர்ந்தவராவீர்.
வேதத்தை துஷ்பிரயோகம் செய்தல்: தேர்ந்தெடுக்கின்ற முக்கியத்துவமும், மறைத்தலும்

(2:146) வேதத்தை பெற்றவர்கள் இதில் உள்ள உண்மையை, தங்களுடைய சொந்தக் குழந்தைகளை அறிவது போல் அவர்கள் அறிவார்கள், ஆயினும், அவர் களில் சிலர் அறிந்து கொண்டே, உண்மையை மறைக்கின்றார்கள்.


(2:147) இது உங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும்; எந்த விதமான சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.


(2:148) நீங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றுவதற்கு திசையைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்; நீங்கள் நன்னெறியை நோக்கி விரைந்து செல்ல வேண்டும். நீங்கள் எங்கிருந்த போதிலும், கடவுள் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவார். கடவுள் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றார்.

கிப்லா மீண்டும் மெக்காவிற்கு திருப்பப்பட்டது

(2:149) நீர் எங்கு சென்றாலும், நீர் உம்முடைய முகத்தை புனித மஸ்ஜிதை* நோக்கி (ஸலாத்தின்போது) திருப்பிக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும். நீங்கள் அனைவரும் செய்யும் எந்த ஒன்றையும் ஒருபோதும் கடவுள் அறியாதவர் அல்ல.

(2:150) நீர் எங்கு சென்றாலும், நீர் உம்முடைய முகத்தை (ஸலாத்தின்போது) புனித மஸ்ஜிதை நோக்கி திருப்பிக் கொள்ள வேண்டும், நீங்கள் எங்கிருந்த போதிலும் அதனை நோக்கி (ஸலாத்தின்போது) உங்கள் முகங்களை திருப்பிக்கொள்ள வேண்டும். இவ்விதமாக, அவர்களில் உள்ள வரம்பு மீறியவர்களைத்தவிர மக்களிடத்தில், உங்களுக்கெதிராக தர்க்கம் இருக்காது. அவர்களுக்கு அஞ்சாதீர், பதிலாக எனக்கே அஞ்சுவீராக, உங்கள் மீதான என்னுடைய அருட்கொடைகளை நான் பின்னர் பூர்த்தி செய்வேன், நீங்கள் வழிகாட்டப் பட்டவராகலாம்.

தொடர்புத்தொழுகைகளை கடைப்பிடிப்பதற்கான நோக்கம்

(6:162) கூறுவீராக, “என்னுடைய தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்), என்னுடைய வழிபாட்டு முறைகள், என்னுடைய வாழ்வு மற்றும் என்னுடைய மரணம், இவை அனைத்தும் பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-க்கு மட்டுமே முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கின்றது.

 

(23:1) நம்பிக்கையாளர்களே உண்மையில் வெற்றியாளர்கள்;

 

(23:2) தங்களுடைய தொடர்புத் தொழுகைகளின் (ஸலாத்) போது பயபக்தியோடு இருப்பவர்கள்.

 

(4:101) போர் காலங்களில் நீங்கள் பயணம் செய்யும் போது, நம்பமறுப்பவர்கள் உங்களை தாக்கக் கூடும் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுடைய தொடர்பு தொழுகைகளை (ஸலாத்) சுருக்கிக் கொள்வதால் உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நம்ப மறுப்பவர்கள் உங்களுடைய தீவிரமான எதிரிகளாவர்.

தொடர்புத் தொழுகைகள்

(4:103) நீங்கள் உங்களுடைய தொடர்புத் தொழுகையை (ஸலாத்) நிறைவு செய்தவுடன், நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ* நீங்கள் கடவுள்-ஐ  நினைவு கூர்ந்திட வேண்டும். போர் முடிந்தவுடன் நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்; தொடர்புத் தொழுகை கள் (ஸலாத்) நம்பிக்கையாளர்கள் மீது குறிப்பிட்ட நேரங்களில் விதியாக்கப்பட்டுள்ளது.

தொடர்புத் தொழுகைகளின் (ஸலாத்) தொனி

(17:110)  “கடவுள் என அவரை அழையுங்கள், அல்லது மிக்க அருளாளர் என அவரை அழையுங்கள்; எந்தப் பெயரை நீங்கள் பயன்படுத்தினாலும், அழகிய பெயர்கள்தான் அவருக்குரியவை” என்று கூறுவீராக.

உமது தொடர்புத் தொழுகைகளை(ஸலாத்) நீர் மிகவும் சப்தமாகவோ, அன்றி இரகசியமாகவோ கூறவேண்டாம்; நடுத்தரமானதொரு தொனியைப் பயன்படுத்துவீராக.

உயிலுக்கு சாட்சி அளித்தல்
(5:106) நம்பிக்கை கொண்டோரே, உங்களில் ஒருவர் இறக்கும் தருவாயில், உயிலுக்குச் சாட்சியாக உங்களுக்கிடையே உள்ள நியாயமான இருவர் இருக்க வேண்டும். நீங்கள் பிரயாணத்தில் இருந்தால், அப்போது இரண்டு வேறு நபர்கள் சாட்சியாக செயல்படலாம். உங்கள் சந்தேகங்களை அவர்கள் நிவர்த்தி செய்வதற்காக தொடர்புத் தொழுகையை (ஸலாத்) நிறைவு செய்த பின்னர், கடவுள் மீது சத்தியம் செய்து, “உயில் எழுதியவர் எங்களுடைய உறவினராக இருந்தாலும் நாங்கள் இதை சுயலாபம் அடைவதற்காக பயன்படுத்த மாட்டோம், அன்றி கடவுள்-உடைய அத்தாட்சியை மறைக்கவும் மாட்டோம், அவ்வாறு மறைத்தால் நாங்கள் பாவிகளாகி விடுவோம்”, என்று கூற வேண்டும்.